தேவையான பொருட்கள் |
தேவையான பொருட்கள்:
1. தோலுரித்த இறால் - 1/2 கிலோ
2. ஒரு பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
3. இரண்டு சிறிய தக்காளிகள்(சிறிய துண்டுகளாக நறுக்கியது)
4. இரண்டு பச்சை மிளகாய் - நறுக்கியது
5. இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு மேசைக் கரண்டி
6. மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
7. கொத்தமல்லித் தூள் - மூன்று தேக்கரண்டி
8. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
9. மஞ்சள் பொடி - இரண்டு தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு
செய்முறை:
மஞ்சல் தூள் கலந்து வதங்கும் இறால் |
தண்ணீர் வற்ற வதங்கிய இறால் |
தே.பொருட்களுடன் வதங்கும் இறால் |
ஊறவைக்கப்பட்ட இறால் |
வதங்கிய இறாலுடன், தேவையான பொருட்கள் அத்தனையையும்
(2 to 10) கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக வதங்கி சேர்ந்து வரும். சற்று மசாலா போல் வேண்டுமென்றால் அந்தப் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடலாம். நன்றாக மொறு மொறுப்பாக வேண்டுமென்றால், இன்னும் கூடுதலாக வதக்கினால் மொறு மொறு பதம் வந்துவிடும்! இந்த இறால் வறுவலை, நேற்றைய பதிவில் செய்த சொதியுடன் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.
இறால் மொறுவல் |
7 comments:
நல்ல சுவையான உணவு குறிப்பு .. நன்றி
இறால் மீனை மொறு மொறுக்க வைத்து ஒரு கை பார்த்திட வேண்டியது தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
தயவு செய்து தவறாக எண்ணாமல் மஞ்சல் என்பதை மஞ்சள் என்று மாற்றி விடவும்
நன்றி.
ராஜபாட்டை - நன்றி!
கரி காலன் - இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? மாற்றிவிட்டேன். நன்றி.
தாரா.
ஏங்க! உங்களுக்கே இது அநியாயமா இல்லையா? நல்ல பசி வேளையில் இப்படி பதிவெழுதி எங்களை இம்சை படுத்தாதீர்கள்.
சிவா நலமா? உங்கள் குட்டி தேவதை அவரை முழுதாக ஆட்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி அடிக்கடி பதிவு பக்கம் அவரை அனுப்புங்கள்.
தாரா - மதிய உணவு சாப்பிடும் போது ஏதாவது படிப்பது வழக்கம். உங்கள் வலைப்பூவை படிக்க ஆரம்பித்தேன். நாட்டையும் சுற்றங்களையும் பிரிந்து இருக்கும் அயல் நாட்டு வாசம் பற்றியும், இங்கு உள்ள சுவையான செய்திகளையும், ஊருக்கு செல்லும் போது அங்கு நடக்கும் கூத்துகளை பற்றியும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் நிரம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். அப்பாவை பற்றி எழுதியதை வாசிக்கும் போது மனது பிசைந்தது - 22 வயதில் எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் தந்தையை தொலைத்த வலியினால் நைந்து இருப்பதாலோ என்னவோ, யார் அப்பாவை பற்றி வாசித்தாலும் சட்டென்று கலங்கி விடுகிறது :-) உங்கள் பொங்கல் கோல போட்டி ரொம்ப கவர்ந்து விட்டது - அடுத்த தடவை நாங்கள் கூடும் போது செய்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பார்க்கவும் சுவைக்கும் நல்ல இடங்கள் எழுதி இருக்கிறீர்கள். அதையும் அடுத்து போகும் போது குறித்து வைத்து முயற்சி செய்ய வேண்டும். உடனே வாழ்த்த வேண்டும் போல் இருந்தது - அதனால் தான் இந்த சமீபத்திய இடுகையில் அனுப்பி விட்டேன். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.
பாண்டியில் இதை "தேங்காகாய் பால் ரசம் " என்பார்கள் . நீங்கள் சொன்னது போல இறாலுடன் நன்றாக இருக்கும்.
Post a Comment