Friday, May 18, 2012

நான் ஏன் FeTNA வெள்ளி விழாவுக்குப் போகிறேன்? - "டாப் டென்" காரணங்கள்



2003 ஆம் ஆண்டில் இருந்து  FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்றுகொண்டிருந்தேன்.  கடந்த மூன்று வருடங்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை.  நிறைய நல்ல அனுபவங்களை இழந்துவிட்டேன்.  அந்த இழப்பை ஈடு கட்டும் வகையில், இந்த வருடம் எங்கள் ஊருக்கு அருகிலேயே பேரவை விழா நடக்கவிருக்கிறது.  அதுவும் வெள்ளி விழா!!!  மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

என் ஆர்வத்திற்கான "டாப் டென்" காரணங்கள்!

1. விழாவிற்கு நண்பர்கள் குடும்பங்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு, வழியில்  சாலையோர விரைவு உணவகங்களில் சாப்பிட்டுக்கொண்டு காரில் பயணிப்பதே ஒரு மகிழ்ச்சியான உல்லாசப் பயணம் தான்! அங்கே சென்ற பின்னரும் அந்த வரவேற்பு, நாதஸ்வரம், பட்டுப்புடவைகள், வேட்டி சட்டைகள், விருந்துச் சாப்பாடு, நலன் விசாரிப்பு என்று ஒரு உறவிணரின் திருமணத்திற்கு சென்றது போன்ற அந்த உணர்வு...அதுவும் வெள்ளி விழா என்றால் ஏற்பாடுகள் எல்லாம் இன்னும் பலமாக இருக்கும்.

2.  நமது வரலாற்றில் வீராங்கனை என்றால் "ஜான்சி ராணி" யைத் தான் தெரியும்.  அனால் "வேலு நாச்சியார்" என்று ஒரு தமிழ் வீராங்கனை இருந்தார் என்பதே இப்பத்தான் கேள்விபடுகிறேன்.  வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். 

3. எழுத்தாளர்களைச் சந்திக்க எனக்கு மிகவும் ஆர்வம்.  2004 ஆம் ஆண்டு பேரவை விழாவுக்கு பிரபஞ்சன் வந்திருந்தார்.  அவருடன் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது.  சிறுகதை எழுத நல்ல பல உத்திகளை எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.  அதற்கப்புறம் பிரபல எழுத்தாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை.  இந்த வருடம் வெள்ளி விழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் வருகிறார்.  அவரின் துணையெழுத்து புத்தகத்தின் மிகப் பெரிய விசிறி நான்.

4. தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு பண்முகப் பரிமாணம் கொண்டவராகத் தெரிகிறார்.   ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார், ஆனால் பண்டைய தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம் இரண்டிலுமே ஆர்முள்ளவராக இருக்கிறார்.  ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கத்தமிழர்களின் எழுத்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்,  பரதநாட்டிய கலைஞராக இருந்தவர், நாடக நடிகை, கவிஞர்....நிறைய சுவாரசியமான விசயங்களை விழாவில் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.  பார்க்கலாம்.

5. சிவகார்திகேயன் - இவருடைய கலகலப்பும், கலாய்ப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இவருக்கு நிறைய ரசிகர்கள், அதுவும் பெண் ரசிகர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  சிவகார்த்திகேயன் வருகிறாரா?  என்கிற கேள்வி ஆங்காங்கே எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.  சில நகைச்சுவையான மணித்துகளில் நனைய நான் தயார்! 

6. தமிழன்-தமிழச்சி மாபெரும் போட்டி - இது ஒரு புதிய போட்டி முயற்சி!  ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் தம் ஊரில் இளைஞர்களைக்கொண்டு ஒரு போட்டி நடத்தும்.  இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர். தமிழ் இலக்கியம், வரலாறு, கலாசாரம் போன்றவற்றில் இளஞர்களுக்கு எந்த அளவு பொது அறிவு இருக்கிறது என்பதை சோதிக்கவே இந்தப் போட்டி.  அந்தந்த ஊர் தமிழ்ச் சங்கத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்கள்,  பெட்னா வெள்ளி விழாவில் நடக்கும் இறுதிச் சுற்றில் கலந்துகொள்வார்கள்.  பெரிய பரிசெல்லாம் உண்டு!

7.  ஈழத்தை யார் மறந்திருந்தாலும், தவறாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அந்த உணர்வுகள் பேரவை விழாவில் புதுப்பிக்கப்படும், மாற்றிஅமைக்கப்படும்.  கடந்த வருடங்களில் ஜெகத் காஸ்பர் ராஜ், எலைன் சாண்டர்ஸ் போன்றவர்களின் பேச்சு பலரை புரட்டிப் போட்டிருக்கிறது.  இந்த முறையும் அப்படிப்பட்ட உரைவீச்சுக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.

8. FeTNA என்றுமே நலிவுற்ற கலைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறியதில்லை.  தப்பாட்டம், பறை, சிலம்பம் போன்ற நடனங்களை நான் தமிழகத்தில் கூட பார்த்ததில்லை.  FeTNA விழாக்களில் தான் பார்த்திருக்கிறேன்.  இந்த வருடம் தெருக்கூத்து மற்றும் உடுக்கையடி பாடல்களைப் பற்றி ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்ட முனைவர் Brenda Beck என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மனியை FeTNA அழைத்து கெளரிவிக்கிறது.  

9.  விழாவில் இறுதி நாள் இரவு நடக்கும் மாபெரும் திரை இசை நிகழ்ச்சி எப்போதுமே மிகப் பிரபலம். மொத்த அரங்கும் நிரம்பி இருக்கும் ஒரே நிகழ்ச்சி அதுவாகத் தான் இருக்கும்!  மூன்று மணிநேரங்கள் இசை மழையில் நனைந்து, நடனமாடி, ஒன்ஸ் மோர் கேட்டு எல்லாரும் குதூகலமாக இருக்கும் நேரம் அது.  பாடகி சித்ரா இந்த வருடம் வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

10. இது தவிர, முதல் நாள் நடக்கவிருக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம், குழந்தைகளுக்கான தமிழ்த் தேனி, மாவட்ட ஆட்சியர் சகாயம், மறைமலை இலக்குவனார் ஐயா இவர்களின் உரைகள், தமிழ் வலைப்பதிவர்கள் மன்றம் - இவை அனைத்திலும் சென்று தலைகாட்ட விருப்பம்.







18 comments:

புதுகை.அப்துல்லா said...

அட திரும்ப எழுத ஆரமிச்சிட்டீங்களா!! 2010 ஆம் ஆண்டு கனெக்ட்டிகட் ஃபெட்னாவிற்கு வந்தேன். இம்முறையும் வருகிறேன்.

புதுகை.அப்துல்லா said...

சிவா அண்ணன் நல்லாருக்காரா? கேட்டேன்னு சொல்லுங்க.

அமுதா கிருஷ்ணா said...

என்ஜாய்...

தாரா said...

அப்துல்லா - பால்டிமோரில் அவசியம் சந்திப்போம். சிவா நன்றாக இருக்கிறார். நன்றி.

தாரா

தாரா said...

அமுதா - நன்றி!!!

SELECTED ME said...

விழா முடிந்தவுடன் தொகுப்புகளை பதிவிடவும்! நன்றி!

பழமைபேசி said...

//புதுகை.அப்துல்லா said...
சிவா அண்ணன் நல்லாருக்காரா? கேட்டேன்னு சொல்லுங்க.//

உபிக்கள் ஒன்னு கூடுறாங்ளாம்ப்பா!! நடக்கட்டு நடக்கட்டு...

துளசி கோபால் said...

நல்லா கொண்டாடுங்க. அப்புறம் கட்டாயம் 'நடந்தவைகளை' பதிவு செய்யுங்க தாரா.

Diva said...

Like

Arasu said...

உங்களின் ”தலைப்பத்து” காரணங்கள் அருமை. பேரவை ஆண்டுவிழாவுக்கு செல்ல இருப்பவர்கள் ஒவ்வொருவரும் இப்படி காரணங்களை எழுதிப் பதிவிட்டால் நல்லது. ”பெண், தாய், தமிழர்” என்ற மூன்று தளத்திலிருந்து வரும் உங்கள் பதிவுகள் உங்களின் தனித்தன்மையை பறைசாற்றுகிறது. தொடர்ந்து பதிவிடுங்கள்.

துரை said...

தமிழன்பர்களை ஈர்க்கும் வகையில், முந்தைய பேரவை விழாக்களின் சிறப்புகளையும், வெள்ளி விழாவின் முக்கிய அம்சங்களையும் எடுத்துக் கூறிய தங்களுக்கு நன்றி.

Anonymous said...

தாரா
தமிழ் இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சியை மறந்து விட்டீர்களா?

புதுகை.அப்துல்லா said...

// பால்டிமோரில் அவசியம் சந்திப்போம் //


அப்ப உங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப்போயி சாப்பாடு போட மாட்டீங்களா?? அவ்வ்வ்வ்...

ஃபிளைடெல்லாம் பிடிச்சு வர்றேன் # டெம்போல்லாம் வச்சு கடத்திருக்கோம் ஸ்டைலில் படிங்க :)))

புதுகை.அப்துல்லா said...

// உபிக்கள் ஒன்னு கூடுறாங்ளாம்ப்பா!! நடக்கட்டு நடக்கட்டு

//

இதை ஒரு உ.பி. யே சொல்றதுதான் பெரிய காமெடி :)

தாரா said...

புதுகை.அப்துல்லா - நாங்களே எங்கள் வீட்டில் இருக்கமாட்டோமே!!! :-)

நீங்க இந்த முறை நிறைய நாள் இங்கே இருக்கற மாதிரி வாங்க.

தாரா.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. எக்கச்சக்கமா ப்ளான் போட்டு வெச்சிருக்கீங்க போலிருக்கு. எஞ்சாய் :-))

தனிமரம் said...

சித்ரா வாரங்களா நல்ல விடயம் பார்த்தபின் பதிவாக போடுங்கோ!

Anonymous said...

தமிழ் தேனீ , அது போல் மலையாள தேனீ , தெலுகு தேனீ , கன்னடதேனீ உம் உள்ளதா? Spelling Bee
என்ப தற்கு "சொல்அரசன் / சொல்அரசி" என அருமையான தமிழ் சொற்கள் இருகின்றனவையே .
குமார்.