Friday, September 02, 2005

சாரு நிவேதிதாவின் 'கோணல் வாக்கியம்'

சாரு நிவேதிதா வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய புத்தக முயற்சிக்கு பொருளுதவி கேட்டு 'யாசிக்கிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்ந்தார். பிறகு அந்தக் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு 'தரித்திரமும் ஏளனமும்' என்கிறக் கட்டுரையில் பதில் சொல்லியிருக்கிறார். அதில் உள்ள ஒரு கோணல் வாக்கியம் என்னை வருத்தப்படவைத்தது. அந்த வாக்கியம் இதுதான்.

"'யாசிக்கிறேன்' என்ற என் கட்டுரையைப் படித்துவிட்டு பலரும் 'சாரு பிச்சையெடுக்கிறார்' என்று ஏளனம் செய்வதாக அறிந்தேன். இலக்கியத்துக்காக பிச்சை என்ன, திருடக் கூட செய்வேன். பெண்ணாக இருந்திருந்தால் விபச்சாரமும் செய்திருப்பேன் "

ஏதோ அவர் உணர்ச்சிவசப்பட்டு இதை எழுதியிருக்கிறார் என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், அதென்ன 'பெண்ணாக இருந்திருந்தால்' ??? விபச்சாரம் என்பது பெண்களின் சொத்தா? அல்லது அதை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

விபச்சாரம் செய்கிற அளவு துணிந்துவிட்ட சாரு, பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஆதங்கப்பட தேவையில்லை! With due respects, ஆணாக இருந்தாலும் அதற்கு வழி இருக்கிறது. Gigolo, Male sex worker என்றெல்லாம் சாரு கேள்விபட்டதில்லையோ? அந்த மாதிரி தொழில் செய்து இலக்கியத்திற்கு பணம் சம்பாதிக்கலாமே? அதனால் அவருக்கென்ன அவலம்? அப்போதும் தமிழுக்குத் தான் அவலம் என்று சொல்லி சுலபமாகத் தப்பித்துவிடலாம் பாருங்கள்!

மன்னித்துவிடுங்கள்...பெண்கள் விசயம் என்பதால் நானும் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்!