Saturday, May 19, 2012

இருபது நிமிடத்தில் ஒரு குழம்பு - சொதி

அமெரிக்கத் தொலைகாட்சியில் Food Network நிகழ்ச்சிகள் பார்ப்பது என்னுடைய இன்னொரு பொழுதுபோக்கு.  Rachel Ray என்கிற சமையல் கலை நிபுணரின் "30 minute meals" என்கிற நிகழ்ச்சியில் 30 நிமிடத்திற்குள் விரைவாக செய்யக்கூடிய உணவு வகைகளை சுறுசுறுப்பாக அவர் செய்து காட்டுவது எனக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகமாக இருக்கும்.

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அன்று என்ன இரவு உணவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வருவேன்.  சமையலில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், வார நாட்களில் அதிக நேரம் சமையலறையிலேயே இருப்பது அலுப்பாக இருக்கும்.  விரைவில் சமைத்து முடித்துவிட்டால் பின் மகளுடனும் கணவருடன் நேரம் செலவழிக்கலாமே.  நம்ம ஊர் உணவு வகைகளில் விரைவாக செய்யக்கூடியவை என்று சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன்.

அப்படி விரைவாக, அதுவும் இருபது நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை "சொதி".  இது இலங்கையில் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.  கேரளாவிலும் பிரபலம். அம்மா, அண்ணி இவர்களெல்லாம் இலங்கையில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டில் அடிக்கடி சொதி உண்டு!  இந்தப் பதிவை எழுதுவதற்காகவே நேற்று சொதி வீட்டில் செய்தேன்.  ஆனால் இந்தச் சொதியை நம்ம ஊரில் செய்வது போல் பாரம்பரிய முறையில் செய்தால் 20 நிமிடங்களில் முடிக்க முடியாது.  நான் சொல்வது போல் செய்தால் தான் விரைவில் செய்து முடிக்கலாம்.  இதோ புகைப்படங்களுடன் செய்முறை...

தேங்காய் பால் சொதி


தேவையான பொருட்கள்


1. பெரிய வெங்காயம் - ஒன்று (சற்றி பெரிய துண்டுகளாக நறுக்கியது)
ஊரில் சின்ன வெங்காயம் உபயோகிப்பார்கள்.  அதை உரிக்க சில கூடுதல் நிமிடங்கள் தேவைப்படும்.
2. தக்காளி சிறியது - இரண்டு
3. பச்சை மிளகாய் - ஐந்து
4. தேங்காய் பால் - ஒரு டப்பா (can)
ஊரில் தேங்காய் துருவி அரைத்து பால் எடுப்பார்கள்.  நமக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம்?  
5. கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
6. மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8 தாளிக்க வேண்டிய கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணை

செய்முறை


வானலியில் எண்ணை காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.  பின்னர் பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.  நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும்.  இப்போது ஒரு கேன் தேங்காய்ப் பாலுடன் அரை தம்ளர் தண்ணீர் கலந்து வாணலியில் ஊற்றவும்.  உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.  ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.  சுவையான சொதி தயார்.  இதனை சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிடலாம்.


                 

12 comments:

ஆத்மா said...

செஞ்சி பாத்துடுவோமில்ல...

Unknown said...

நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்

ஹுஸைனம்மா said...

கோவிக்காதீங்க... இது சொதி இல்லை, ‘சதி’!! ஒரு காய்கூட இல்லையே இதில்? :-)))))

வல்லிசிம்ஹன் said...

Stew தான் சொதி ஆகிவிட்டதோ.
நன்றாக இருக்கிறது.

தாரா said...
This comment has been removed by the author.
தாரா said...

சிட்டுகுருவி - செஞ்சி பார்த்துட்டு நல்லா வரலைன்னா இங்க பின்னூட்டமெல்லாம் போடாதீங்க :-)))

தாரா.

தாரா said...

ஹூஸைனம்மா - காய் வெட்டி, வதக்கி போட்டால் நேரம் ஆகிவிடுமே?! :-))) காய் போடாமலும் செய்யலாம், ஆனால் சிலர் வெண்டைக்காய் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன்.

தாரா.

Vassan said...

காய்கறி சொதி

ப.கந்தசாமி said...

Good.

sundar said...

வட இந்திய ‘கடி’, தமிழகத்து ‘மோர்குழம்பு’ கேரள்த்து ‘அவியல்’ எல்லாம் கலந்த மாதிரி இருக்கும் போல

சாந்தி மாரியப்பன் said...

பார்க்க நல்லாத்தான் இருக்கு..

Anonymous said...

Thara.. If u add boiled potato and ginger to this and exclude tomato, it is "IshTu" or stew in Kerala.. tastes yum with appam.. vilasini