கடந்த சனிக்கிழமை சன் தொலைக்காட்சியில் 'இளமை புதுமை' நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு ரொம்ப போர் அடித்ததால் பார்த்தேன். சொர்ணமால்யாவிற்குப் பதிலாக அர்ச்சனா! எப்போது மாறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அலட்டலும் அறுவையும் என்னவோ அதேதான். விசயத்திற்கு வருகிறேன். அந்த இளமை புதுமையில் நான்கு இளைஞர்கள் நம்பியார், பாக்கியராஜ், ரஜினி போல் மிமிக்ரி செய்தார்கள். இதைப் போல் பல மிமிக்ரி நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குத் தோன்றாத இந்தக் கேள்வி சனிக்கிழமை தொன்றியது.
நடிகைகளை ஏன் யாருமே மிமிக்ரி செய்வதில்லை?
இந்த காலத்து நடிகைகளை கணக்கிலேயே எடுக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழும் தெரியாது, சொந்தக் குரலும் கிடையாது. எல்லாருக்கும் டப்பிங் குரல் தான். பல நடிகைகளுக்கு ஒரே டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுக்கிறார். சில நடிகைகள் சொந்தக்குரலில், தமிழில் பேசினாலும், அவர்களுடைய குரலிலோ, வசன உச்சரிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை! எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, நம்பியார் போன்ற நடிகர்களே இன்றும் அதிகம் மிமிக்ரி செய்யப்படுகிறார்கள். அதற்கு வலுவான காரணங்கள் தெரிந்ததே. அவர்களுடைய நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும்(body language) தனித்தன்மை இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு மாதிரி கோபப்பட்டால், சிவாஜி வேறு விதமாகக் கோபப்பட்டார். கமல் சிரிப்பதற்கும் ரஜினி சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் நடிகைகள் அப்படி இல்லை. ஒரே மாதிரி கோபம், ஒரே மாதிரி வெட்கம், ஒரே மாதிரி அழுகை, ஒரே மாதிரி இடையை அசைத்துக்கொண்டு ஒரு நடை! பெரும்பாலான நடிகைகளுக்கு வசன உச்சரிப்பிலோ, நடிப்பிலோ எந்தவிதமான தனித்தன்மையும் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விசயம். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வதில் ஏன் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை? வெறும் நடிகைகளாகவே இருக்கிறார்களே, எப்போது கலைஞர்களாக ஆவார்கள்?
அந்த காலத்து நடிகைகள் கொஞ்சம் தேவலாம். அழகாகத் தமிழ் பேசினார்கள். கே.ஆர் விஜயா, எம்.என் ராஜம் - இவர்களின் குரல்கள் கணீரென்று தனியாகத் தெரியும். கண்ணாம்பாவின் "மகனே மனோகரா! பொங்கி எழு!", கே.ஆர்.விஜயா அம்மனாக வந்து பேசும் பக்தி வசனங்கள், மனோரமாவின் ஆச்சி பாணி வசனங்கள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. ஸில்க் ஸ்மிதாவின் குரலில் கூட ஒரு தனி கவர்ச்சி தெரியும். இதையெல்லாம் யாராவது மிமிக்ரி செய்தால் நன்றாக இருக்குமே? பின்னனிப் பாடகி மாலதி லஷ்மண் கே.பி சுந்தராம்பாள் குரலில் அருமையாகப் பாடி ஒரு முறை கேட்டிருக்கிறேன். பெண்கள் நுழையாத சில துறைகளில் இந்த பல குரல் கலையும் ஒன்று என்று தெரிகிறது.
8 comments:
Dear Thara,
I have seen gals doing mimicry in Banupriya,Revathy and all during College Competitions :) But as you said, the nos are very less for the stated reasons.
- Arun Vaidyanathan
It should be 'mimicry like Banupriya,Revathy ' in the above post..Sorry!
Arun, Priya - thanks for the comments.
Priya - really?? I wish I had seen that program.
Thara.
நல்லதொரு சிந்தனைப்பதிவு.
நீங்க இப்போதுல்ல நடிகைகளிடம் எதிர்பார்ப்பது டூ மச்:)
ஆனால் அதே நேரத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்றழைக்கப்படும் பிண்ணணிக்குரல் கொடுப்பவர்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள். அதிலும் ரேணுகா-வோ யாரோ, சிம்ரன், ஜோதிகா என்று பல பிரபலங்களுக்கு அவர்களுக்கென்றே பிரத்யேக குரல் கொடுத்துவருகின்றார். பிரமிக்கவைப்பவை.
நானும் மிமிக்ரி செய்யும் பெண்களை ரொம்ப அரிதாகவே பார்த்துள்ளேன்.
அப்புறம் ப்ரியா சொல்லும்... Baby Shamli மாதிரி மிமிக்ரி செய்த இ.பு நிகழ்ச்சியை நானும் (சற்றே) பார்த்ததாக நினைவு. அந்தப்பெண் ஷாம்லியாகவே வந்தார் - அவரிடம் அவங்கப்பா ஹார்மோன் ஊசி போட்டதாக வந்த வதந்தி பற்றியெல்லாம் நிகழ்ச்சியை நடத்திய அந்தப்பெண் (எனக்கு அர்ச்சனா தெரியாது:) விசாரித்தார்!?
//வெறும் நடிகைகளாகவே இருக்கிறார்களே, எப்போது கலைஞர்களாக ஆவார்கள்?
//
that is the question. you are arising the questions i alwwys asked myself (not only about THIS post)But you have the "delicate" talent to expose them. congrads..
p.s: sorry for the english..some problem with my computer now..
//வெறும் நடிகைகளாகவே இருக்கிறார்களே, எப்போது கலைஞர்களாக ஆவார்கள்?//
very good..my comments dispeared..will try later
தாரா ரொம்ப நாள் ஆச்சு, ஆளை காணோம்? நான் கூட பார்த்தேன், அந்த ஷாமிலி சிரிப்பை அந்த பெண் என்னமா மிமிக்ரி
செஞ்சி காட்டினாள் இல்லையா?
அப்புறம் இத படிச்சிட்டு ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்குங்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்க வரும் முன்பு பிரபல மிமிக்ரி ஆக்டர், கலாபவன் மணியும் அப்படியே.
Post a Comment