Monday, June 04, 2007

தூது செல்ல ஒரு தோழி இல்லை

Image Hosting

பொதுவாக சனிக்கிழமை காலை வேளைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலைக்குச் செல்லும் பதட்டமில்லாமல் தாமதமாக எழுந்து, தேநீர் கோப்பையுடன் உலாத்துவது வழக்கம். ஆனால் அப்படிப்பட்ட சனிக் கிழமையைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது வெளியூர் பயணம், ஏதாவது விழா, கூட்டம் என்று போனதில் என்னுடைய அபிமான சனிக் கிழமைகளைத் தொலைத்திருந்தேன். கடந்த சனிக்கிழமை காலை கண்விழித்தபோது அமைதியாக இருந்தது. எந்த பயணமும் இல்லை, எந்தத் திட்டமும் இல்லை. ஆஹா! இதற்குத் தானே ஆசைப்பட்டேன்!


என் தோழிகளிடம் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது...இன்று நிதானமாகப் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தேன். சட்டென்று ஒரு உண்மை உரைத்தது! அவர்கள் தான் இந்தியா போய்விட்டார்களே?!!! விடுமுறைக்கு இல்லைங்க! நிரந்தரமாக!. ஆமாம்...கடந்த ஒரு வருடமாகவே என்னுடைய மூன்று நெருங்கியத் தோழிகள் குடும்பத்தோடு இந்தியா சென்று குடியேறப்போகிறோம் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். திடீரென்று நிஜமாக போய்விட்டார்கள். ஒரு தோழி சென்ற வருடமே போய்விட்டார். மற்ற இருவரும் சென்ற மாதம் தான் போனார்கள். எல்லாருக்கும் குதூகலமாக 'farewell party" எல்லாம் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தபோது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு அமைதியான சனிக்கிழமை காலையில் அவர்களின் பிரிவு என்னைத் தாக்கியது.


சரி, அவர்களுடன் பேசியே ஆகவேண்டும் என்று ஒவ்வொருவராக தொலைபேசியில் அழைத்தேன். ஒருவர் பெங்களூரில் குழந்தைகளுடன் "Spider Man" படத்திற்கு நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். மற்றொருவர் சென்னையில் குடும்பத்துடன் "Pizza Corner" சென்றுகொண்டிருந்தார். என்ன வேடிக்கை?! நாம் இங்கே தமிழ்த் திரைப்படங்களையும், "சரவணபவா" உணவகங்களையும் நாடிச் செல்கிறோம். அங்கே அவர்கள் ஆங்கிலப் படங்கள், மேற்கத்திய உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது எவ்வளவு உண்மை!


திரும்பிச் சென்ற என் தோழிகள், ஒரு தவறைச் செய்துவிட்டார்கள்! தம் குழந்தைகளை மட்டும் தான் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கணவன்மார்களை இங்கேயே இருந்துச் சம்பாரித்து அனுப்புங்கள் என்று விட்டுச் சென்றுவிட்டார்கள்! விளைவு??? என் கணவரின் தொழர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை! எனக்குத்தான் தோழிகள் பஞ்சம் இப்போது. பச்சை விளக்கு(?) திரைப்படத்தில் வரும் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடல் என் சூழ்நிலைக்கு பொறுத்தமாக இருக்கிறது :-)

11 comments:

selventhiran said...

இக்கரைக்கு அக்கரை பச்சை. அக்கறையோடு இருந்தால் எக்கரையும் பச்சை. கவலைப்படாதீங்க.. இந்தியா டஞ்சன் கண்ட்ரினு விரைவில் திரும்பி வந்துடுவாங்க...

லதா said...

நல்ல வேளை உங்களுக்குத் தமிழ்மணமேட்டிஸ் (நன்றி - இலவசக்கொத்தனார்) இல்லை
:-)

செல்வநாயகி said...

:))

keep writing thara.

கதிரவன் said...

ஆனாலும் உங்க நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான் :-(
கவலைப்படாதீங்க..அங்கே இன்னும் நிறைய நட்பு ஏற்படுத்திக்கங்க

அப்புறம், நீங்க சொல்லியிருக்கற பாட்டுல வர்ற 'தூது' தலைவனுக்கு விடற தூதுன்னு நினைக்கிறேன்

படம்:"பச்சை விளக்கு"தான். பாடல் வரிகள் இங்கே :
http://psusheela.org/tam/show_lyrics.php?id=1602

ஏதோ என்னால் முடிந்த உதவி :-))

தாரா said...

செல்வேந்திரன்: அவங்க திரும்பி வர மாதிரி எனக்குத் தெரியலை.

நன்றி
தாரா

தாரா said...

லதா,

தமிழ்மணமேட்டிஸ் என்றால் என்ன? எனக்குப் புரியவில்லை.

நன்றி
தாரா

தாரா said...

நன்றி செல்வநாயகி! தொடர்ந்து எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

தாரா.

தாரா said...

கதிரவன், பி.சுசீலாவின் இனையதளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

தாரா.

Anonymous said...

" என்ன வேடிக்கை?! நாம் இங்கே தமிழ்த் திரைப்படங்களையும், "சரவணபவா" உணவகங்களையும் நாடிச் செல்கிறோம். அங்கே அவர்கள் ஆங்கிலப் படங்கள், மேற்கத்திய உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது எவ்வளவு உண்மை!"Neengal solvathu 100% correct ;-)

ulagam sutrum valibi said...

தாரா,
உனக்குத் தமிழ்ப் பாட்டு வேண்டுமானால், raaga.com,musicindaonline இந்த தளங்களில் கேட்கலாம்.

அன்புடன் அருணா said...

செல்வேந்திரன் said...
//இக்கரைக்கு அக்கரை பச்சை. அக்கறையோடு இருந்தால் எக்கரையும் பச்சை. கவலைப்படாதீங்க.. //
ரொம்ப சரி!