Thursday, February 17, 2005

Golden Birthday என்றால் என்ன?

Golden Birthday அப்படின்னா உங்களுக்கு என்ன தெரியுமா?

50 ஆவது பிறந்த நாள் அப்படின்னு தானே நினைக்கத் தோனுது? அது தான் இல்லை.

உங்களுடைய வயதும் பிறந்த தேதியும் ஒன்றாக வந்தால் அந்தப் பிறந்த நாள், உங்களுடைய தங்கப் பிறந்த நாள்.

குழம்புதா?

உங்களுடைய பிறந்த தேதி மார்ச் 30 என்று வைத்துக் கொள்வோம். தற்போது உங்களுக்கு வயது 29 என்று வைத்துக் கொள்வோம். வருகிற மார்ச் 30 உங்களுடைய தங்கப் பிறந்த நாள். ஏனென்றால் உங்களுடைய
வயது(30) = உங்களுடைய பிறந்த தேதி(30).

இப்ப புரியுதா?

இது போல் வாழ் நாளில் ஒரு முறை தான் வருமாம்.

ஏற்கனவே பலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் எனக்கு இப்போது தான் தெரிய வந்தது. சரி முடிந்தவரை இதை பரப்புவோமே என்று வலைப் பதிவில் போடுகிறேன்.

விஷயம் தெரியாமல் தங்கப் பிறந்த நாளைக் கோட்டை விட்டவர்கள், உங்களுடைய குழந்தைகளுடையதையாவது மறக்காமல் கொண்டாடுங்கள்.

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

என்னப்போல முதலாம் தேதி பிறந்தவர்கள் எல்லாம் என்னவாம் செய்வது. பிள்ளையளுக்குக் கொண்டாடி மகிழ வேண்டியதுதான்

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள தாரா,
உங்களின் பதிவுகளைத் தவறாமல் படிக்கும் சிலருள் ஒருத்தி நான். மிகவும் சரளமாக அதே சமயம் இந்தப்பதிவைப் போல புதுப்புது விஷயங்களையும் எழுதுகிறீர்கள். படிக்கவும் அறியவும் சுவையாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், படிக்கிறோம்,..வாழ்த்துக்கள்.
அன்புடன், ஜேயந்தி (வல்லமை தாராயோ)

தாரா said...

அன்புள்ள ஜெயந்தி,

நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர். நீங்கள் என்னைப் பாராட்டுவது எனக்கு ரொம்ப பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ரொம்ப நன்றி.

தாரா.

Anonymous said...

Thara, I know that my friend's birthday is in the month of march but I don't think she is 30. Thanks a bunch for reminding me.

லதா said...

leap year feb 29 andRu pirandhavargaLukku vaazhnaaLil orumurai kuuda golden birthday varaadhaa ? :-((

மாயவரத்தான் said...

ஜனவரி ஒண்ணாம் தேதி பொறந்து தங்கப் பொறந்த நாள் கொண்டாட முடியாம போய்டிச்சேடா மாயவரத்தான்..! சரி. பிளாட்டினம் பொறந்தநாள் கொண்டாடிலாம். (இதுவும் ஆயுளுக்கும் ஒரு தபா தான் வருமாம். பலருக்கு அதுவும் வராதாம். )

மாயவரத்தான் said...

//leap year feb 29 andRu pirandhavargaLukku vaazhnaaLil orumurai kuuda golden birthday varaadhaa ? :-(( //

அந்த மாதிரியான மக்கால் சாதரணமாவே நாலு வருஷத்துக்கு ஒரு தபா தான் கொண்டாட முடியும். இதிலே தங்க பிறந்தநாள் தான் கொன்டாடுவேன்னு இருந்தா அம்புட்டு தான்!

Anonymous said...

???????? 29?? ?????? ????. ??????? ????? ??????????? ????? ??????????

Anonymous said...

Golden b'day will come when he is 29. Atharkum Leap yearkkum enna sambantham???

Anonymous said...

sorry, Ignore my previous comment. Thookkka kalakkam,.....