இன்று காலை தினமணி செய்திகளில்,
விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பின், அவர் குற்றமற்றவர் என்று முறையாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி கூறியுள்ளதாகப் படித்தேன். நீதிபதி அதொடு நிறுத்தியிருக்கலாம். அவர் தொடர்ந்து "சீதையே தனது தூய்மையை நிரூபிக்க தீக்குளித்தார். சீதையால் மட்டுமே அவ்வாறு நிரூபிக்க இயலும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது" என்று சொல்லியிருக்கிறார். இதை நீதிமன்றம் நம்புகிறது என்றால், ஒரு உண்மையை நீரூபித்தப் பிறகும் அது ஏற்றுக்கொள்ளப் படாமல் பயனற்று போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நீதிமன்றம் நம்புகிறது என்று அர்த்தம். புரியவில்லையா?
சீதை தீக்குளித்து தன் தூய்மையை நீரூபித்தப் பிறகும் நாட்டு மக்களின் சந்தேகத்தைத் தீர்க்க ராமன் அவளை காட்டுக்கு அனுப்பிவிட்டான். சீதை
தீக்குளித்தும், அவளது தூய்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அந்த நீதிபதி யோசிக்காமல் பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தின் நம்பிக்கைக்கே இது முரண்பாடாக அமைகிறது.
ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு இதிகாசம். அதைப் படித்தோம், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தோம், படம் பிடித்தோம். அதோடு விட்டுவிட வேண்டும். அதிலிருந்து உதாரணங்களை அதுவும் இந்த நூற்றாண்டில் எடுத்துக்கொள்வது அர்த்தமற்றதாக இருக்கிறது.
8 comments:
அன்புள்ள தாரா,
வணக்கம். உங்களது அரவாணிகள் குறித்த பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அங்கே எப்படி கமெண்டுவது என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறீர்கள், தொடரட்டும்!
- அன்புடன் அருண்
ராமாயணத்தை நம்புவதும் நம்பாததும் அவரின் தனிப்பட்ட விஷயம். அதையெல்லாம் நீதிபரிபாலத்தில் நுழைப்பது சரியான செயலல்ல. ஜெயஸ்ரீ சொன்னமாதிரி, 'யார் போய் சொல்லுவது?' சொன்னால் எதாவது நீதிமன்ற அவமதிப்பு வந்துடுமோ:-S
Through this is clearly an expression of adoration of the (indirect) chauvanistic attitude. it is really a pity. One can extend this outcome to any level. But as Kasi tells :( :( poonaikku yaar mani katuvathu. Nichayam naam anaivarume eligal alla.
நீதிபதி, இதற்கு அர்த்தம் என்ன என்பது அவருக்கு தெரியும். அவர் ஒரு கருத்து சொல்கிறார் என்றால் அதன் அர்த்தம் என்ன? அப்ப சாமியார் எல்லாம் சாமான்(பொம்பளை) போடுவான். எவனும் கேட்ககூடாதா?
தாரா தப்பான அர்த்தம் கற்பிக்காதீர்? சரியா?
Anonymous,
எவனும் கேட்கக் கூடாதுன்னு சொல்லலை. நீதிபதி கேட்டார், மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார். சந்தோஷம் தான். அவர் சொன்ன ராமாயண உதாரணம் தான் சரியில்லை என்று சொன்னேன். தவறாக புரிந்து கொண்டீர்கள் போலிருக்கு.
தாரா.
உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக இவ்வார்தைகளைப் பற்றி ஏதாவது கருத்துக் கூறப்படும் என்றுதான் தோன்றுகிறது. மற்றும், தான் நிரபராதி என்று நிரூபிப்பது விஜயேந்திரர் வேலை அல்ல. அவர் குற்றவாளி என்று ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிப்பது பிராஸிக்யூஷனின் வேலையாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஜயேந்திரர் மீது யாரோ போட்ட வழக்கு ஹைதரபாத் நீதிமன்றத்தில் விசாராணைக்கு வந்த போது, அதை தள்ளுபடி செய்த நீதிபதி சொன்ன கொசுறு கருத்து:
ஜெயேந்திரர் - இப்போது பாஞ்சாலியின் நிலையில் இருந்து கஷ்டப்படுகிறார்
என்பது. இதுவும் பத்திரிக்கையில்தான் படித்தேன்.
எம்.கே குமாரின் வலைப் பதிவில் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு. மு.இஸ்மாயில் அவர்கள் கம்பராமாயணத்தை ஆழ்ந்து படித்தவர் என்றும், கம்பராமாயணத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதியிருப்பதாகவும் படித்தேன். நீதிபதிகளுக்கும் இதிகாசங்களுக்கும் இருக்கும் தொடர்பும் இந்த நிகழ்வுப் பொருத்தங்களும்(coincidence) என்னை வியக்க வைக்கின்றன.
தாரா.
Post a Comment