கடந்த சனிக்கிழமை எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தேர்தல் நடந்தது. என் கணவர் துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஏகப்பட்ட வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வெற்றியைக் கொண்டாடிவிட்டு நேற்று தான் வீடு திரும்பினோம். ஒரு காபி போடலாம் என்று சமையலறைக்குச் சென்று விளக்கைப் போட்டேன். அந்த ட்யூப் லைட், டிஸ்கோ லைட் போல் அனைந்து அனைந்து எறிந்து கொண்டிருந்தது. ஹம்ம்...மூன்று மாதங்களாக என் கணவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அந்த விளக்கை சரி செய்து கொடுக்கச் சொல்லி. ஹோம் டிப்போ(Home Depot) சென்று விளக்கை வாங்கி வந்து மாட்ட வேண்டும், அவ்வளவு தான். ஒவ்வொரு வார இறுதியிலும், நான் அவருக்கு ஞாபகப்படுத்தும் போதெல்லாம், "அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்" என்பார். அப்பறம் தொலைபேசி, இன்டர்னெட்,
நண்பர்கள் என்று அந்த வார இறுதியும் சென்றுவிடும். சரி, அவரிடம் மீண்டும் ஞாபகப் படுத்தலாம் என்று முன்னறைக்கு வந்த போது, அவர் தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
"வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி"
"..."
"ஆமாம் கொஞ்சம் சிரமமான தேர்தல் தான், ஆனால் மக்கள் நம்ம பக்கம் தான் இருந்தார்கள்"
"..."
"அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்"
மறு முனையில் இருப்பவர் யாரென்று என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால், அவர் காதில் பூ இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது.
6 comments:
I was also told that elections in DC Tamil Sangam weretaking place on last Saturday. Its good to know that DC Tamil Sangam follow a democratic process to choose its office bearers. Keep it up. Which group won? Please list the winners for all the posts. How is it conducted? If someone wins as president, he can choose his team? or for everypost there was an election? Thanks and regards, PK Sivakumar
நீங்க நல்லா எழுதுறீங்க. உங்க ஊரிலும் இந்த வட்டம்,சதுரம் இதெல்லாம் உண்டா?
///..மறு முனையில் இருப்பவர் யாரென்று என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால், அவர் காதில் பூ இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது.///
ஹா..ஹா... :)
இப்படி இருப்பவரை விளக்கு மாற்ற சொன்னால், பாதி விளக்கு மாற்றும்போது சென்றுவிட்டால் உள்ளதும் போனது ... என்று ஆகிவிடும், இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
Read all your posting Thara. Nice. Keep it up.
nEsamudan
Venkatesh r
//ஹோம் டிப்போ(Home Depot) சென்று விளக்கை வாங்கி வந்து மாட்ட வேண்டும், அவ்வளவு தான்.// அவ்வளவு தானே ! அதை நீங்களே வாங்கி மாட்டலாமே. இதற்கெல்லம் துணை தலைவரா? :)
Post a Comment