Saturday, January 08, 2005

விவேக் ஒபராய்


Image Hosted by ImageShack.us
எனக்கு அபிமான சினிமா ஹீரோ என்று யாரும் இருந்ததில்லை. ஒவ்வொரு படத்தில் ஒவ்வொருவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது. நான் விவேக் ஒபராயின் படம் ஒன்று கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது நான் அவருடைய பரம விசிறி ஆகிவிட்டேன். தேவனாம்பட்டிணம் கிராமத்தில் அவர் செய்து கொண்டிருப்பது எவ்வளவு உயர்ந்த சேவை! பம்பாயிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, தேவனாம்பட்டிணத்திலேயே தங்கி அங்கே வீடிழந்தவர்களுக்கு குடிசைகள் கட்டிக்கொடுத்து, சாப்பாடு, மருந்து, உடைகள் என்று சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அதோடு நிற்காமல் ஜனவரி 16 ஆம் தேதி சில மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறாராம். பணம் இருந்தால் இதெல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யவார்கள் என்று சொல்வது தவறு. மனசு வரனும் முதலில். விவேக் ஒபராய் செய்யும் சேவைகள் மக்களை நேரடியாக அதுவும் உடனடியாக சென்று அடைகிறது. அதுவும் அவர் அந்தக் கிராமத்திலே தங்கி, தமிழ் கற்றுக் கொண்டு, மக்களோடு மக்களாக கலந்து பழகுவது என்னை பிரமிக்க வைக்கிறது. தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள். அவ்வப்போது ட்ரக்குகளில் வந்து தூக்கி எறியப்படும் உணவு, உடைகளை விட விவேக் ஒபராயைப் போல் அவர்களுக்கு வேண்டியதை கூடவே இருந்து பரிவன்போடு செய்யப்படும் உதவிகளை தான் அவர்கள் விரும்புவார்கள்.

எல்லாரும் அவரவர்களுக்கு இயன்ற வகையில் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். யாரையும் குறை சொல்லக் கூடாது. இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம். பம்பாயிலிருந்து ஒரு இந்தி சினிமா நட்சத்திரம் வந்து இப்படி சேவை செய்து கொண்டிருக்கிறாரே, நம்ம தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? எல்லாரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஏழைகளுக்காகப் போராடுவதும், அவர்களுக்காக எழுச்சி மிக்க வசனம் பேசுவதும் சினிமாவில் மட்டும் தானா? அவர்கள் வெறும் நிழல் ஹீரோக்கள் தானா? விவேக் ஒபராய் நிஜ ஹீரோ. ஐஸ்வர்யா ராய் கொடுத்து வைத்தவர்!(?)

8 comments:

Anonymous said...

Thara ... You are 100% correct. I become fan of Vivek Oberai.

Prabhu

பினாத்தல் சுரேஷ் said...

Yes, I agree that Vivek is doing a wonderful job both financially and physically.

I do not think also he is doing this for publicity. He must be aware that none these villagers were , nor will be his fans for his Hindi movies.

But i do not think comparing him with Tamil cine stars is right. Everybody is doing what they are capable of. If we compare only Vivek is doing this and why Kamal/rajni dont do the same way, We have to extend the same to all professions also, isn't it? Why Only the specific District collectors are involved in the Relief job why not others? Why only some Computer engineers are invovled why not others?.. the comparison will be endless.

Anonymous said...

i also same us u,i like vivek oberai

Anonymous said...

Damn, our tamil heroes, only donated their black money. that's all.

akkinikunchu

தாரா said...

This reply is for Suresh. I agree with you in saying that comparisons can be endless, but this is the right opportunity for the movie stars to show that they are atleast one bit of what they are in movies.

Thara.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

u r right Thara. I hae become a big fan of Vivek Oberoi too. havent watched any of his films either. It's a pity that our Tamil actors couldnt come together and do something like this, instead of appearing on TV and entreating ppl to donate.

As Rajni Ramki said, its a pity that none of the rasikar mandrams came forward to do something productive.

Just FYI - I read somewhere that Vivek Oberoi's mom is a Tamilian.

Still, this is something commendable. Vivek has become famous even among my non-indian friends.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Thara,

saw your question in Tamilblogs.

how to post photos

Anonymous said...

விவேக் ஒபெரை செய்வது பாராட்டுக்குரியது. அவரை போல வசதியானவர்கள் (Not just Actors/Actresses) 'Adopt a Village' போல செய்தால், மக்களுக்கு உதவிகள் நேரடியாக போய்சேரும்.
நான் ஏன் அரசாங்கத்தை நம்பமருக்கிறேன்?