Thursday, January 06, 2005

அமெரிக்கர்களின் மனித நேயம்

கடந்த வாரம் என் அலுவலகத்தில் சுனாமி நிவாரண நிதி திரட்டும் வேலை மும்முரமாக நடந்தது. அதை முன்னின்று நடத்தியவர்கள் அமெரிக்கர்கள் பலர் தங்களது க்யூபிக்கிள்களில் ஆசையாக வைத்திருந்த செடிகள், மீண் தொட்டி, அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு, வசூலான பணத்தை சுனாமி நிவாரண நிதிக்குக் கொடுத்தார்கள். என் க்யூபிக்கிளில் உருப்படியான எந்தப் பொருளும் இல்லை. அதானால் என்னால் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. ஒரு பெண்மணி, "நேற்று தான் $300 டாலர்கள் நிதியாக அனுப்பினேன். என்ன, இந்த மாதம் வெளியில் சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டும். எனக்கு இது மிகச் சிறிய இழப்பு. என் குழந்தைகளை உயிருடன் தினம் பார்க்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். சுனாமியினால் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்களின் இழப்பை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்றார். இன்னொருவர் என்னிடம் "நீ இன்னும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் இடத்தில் நான் இருந்திருந்தால் இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தியா சென்று என்னாலான உதவிகளை செய்திருப்பேன்" என்றார்!. ஏற்கனவே கில்டியாக இருந்த எனக்கு இன்னும் வருத்தமாகப் போய்விட்டது. மேலும், இலங்கையில் மிகப் பெரிய சேதம் நேர்ந்திருக்கும் போது இலங்கை அரசாங்கம் தமிழ் ஈழப் பகுதிகளுக்கு உதவி செய்வதில் பாராபட்சம் பார்ப்பது மிகவும் தவறு என்றும் சிலர் வருத்தப்பட்டர்கள். வேற்று நாட்டவர்களாக இருந்தாலும் அமெரிக்கர்கள் காட்டும் ஆதரவும், ஆறுதலும் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பொது மக்கள் இப்படி இருக்க, நிவாரண நிதி விஷயத்தில் அதிபர் புஷ் கஞ்சத்தனம் காட்டியிருப்பதாக அமெரிக்கர்களே வருத்தப்படுகிறார்கள். முதலில் $15 மில்லியன் என்று அறிவித்திருந்தார். அது இந்த மாதம் அவருடைய பதவி ஏற்பு தினத்தன்று(Presidential Inauguration) ரிபப்ளிகன் கட்சியினர் திட்டமிட்டிருக்கும் கொண்டாட்டச் செலவில் பாதியை விட கம்மியாம்!. பிறகு நிதி $35 மில்லியனாக உயர்த்தப்பட்டபோது கூட என் மேலாளர் "Shame on him" என்று திட்டிக் கொண்டிருந்தார். இப்போது இன்னும் உயர்த்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

1 comment:

Anonymous said...

http://ipsnews.net/new_focus/tsunami/

wichita