Friday, May 13, 2005

படிக்க, ரசிக்க சில புதுக் கவிதைகள்

இன்று என் தோழி இந்தப் புதுக்கவிதைகளை மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். அவளுக்கு வேறு யாரோ அனுப்பியிருந்தார்களாம். இவற்றை யார் எழுதியது என்று சரியாகத் தெரியவில்லை. சில கவிதைகள் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்றாள். யார் எழுதினார்களோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நீங்களும் படித்து ரசியுங்கள். எழுதியவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. தாடி, மீசையிடம் சொல்கிறது.
இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்...
ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

2. லேடீஸ் பஸ்

ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

3. அரசியல்

பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

4. லஞ்சம்

வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

5. இந்தியா ஒளிர்கிறது

ஏற்றுமதி ரக வாகனத்தில் ஏறி
ஆயிரத்திற்குப் பெற்ற இங்கிலாந்து உடையணிந்து
எளிதாய் கைக்குள் அடங்கும் கொரிய தொலைபேசியில்
ஏளனமாய் நகைத்து நண்பனிடம் கூறினேன்
ஏழ்மை ஒழியும் வரை இந்தியா ஒளிராது என்று!

6. சந்தன மரம் என்றார்கள் பல்லாண்டுகளாக...
பின்னர் சங்கர மடம் என்றார்கள்...
இப்போது சங்கட மனதுடன் நான்...
சந்ததம் இப்படியொரு சங்கதி கேட்டு!

7. ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!

5 comments:

Anonymous said...

Aha! arumaiyana puthuk kavithaigalthAm.
mihavum rasithEn. cirithEn.

tiruchi payan said...

தாரா...

இப்பொழுது..தமிழில்..(இன்று தான் இப்பொழுது தான்.. இங்கே தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டேன்.. தாளா மகிழ்ச்சி..)

வணக்கம்...

நல்ல, அருமையான, புதிய கவிதைகள்..

மிகவும் ரசித்தேன்.. வாய் விட்டுச் சிரித்தேன்... திடீரென்று அலுவலகத்தில்.. உள்ளே நுழைந்தவர் ஒரு மாதிரி பார்த்தார்..

கவலையில்லை எனக்கு..

சிறகுகள் நீளட்டும்..

திருச்சி பையன்.

nedumbooran said...

தாரா..
உங்களின் பக்கம் வெகு இனிமை..
தில்லையின் வீதிகளில் திரிந்தவன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சி.!

நெடும்பூரான்..

நிலவு நண்பன் said...

hhi thara

very very nice poem that was...i like it very much..A great salute for u to collect these poems...bye take care

KARTHIKRAMAS said...

/ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!/
:-D