புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களுக்கான பகுதிக்குச் சென்றபோது, அங்கே ஒரு திரையில் அந்த விருது பெற்ற சில புகைப்பட நிபுணர்களின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நிபுணர் கூறுகிறார் "It's a honor to be a journalist, because if you care about something, you can make half a million people care about it" என்று. எவ்வளவு உண்மை! கொசோவாவில் நடந்த இனப் போராட்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது அங்கே இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் வரை.
கொசோவாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில், இரும்புக் கம்பிகளின் இருபுறம் உள்ள உறவிணர்கள் இந்தக் இரண்டு வயது குழந்தையை முத்தம் கொடுப்பதற்காக கம்பிகளின் வழியாக கைமாற்றம் செய்துகொள்கிறார்கள்.
தன் உடலில் போதை மருந்தை செலுத்துக்கொள்ளும் ஒரு தாய்! பின்னால் துவண்டு தூங்கிக்கொண்டிருக்கும் அவளது குழந்தை!
கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்த தன் குழந்தையை அள்ளிக்கொள்ளும் தந்தை!
இப்படி வாழ்க்கையின் கொடூரங்களை அந்த தருணங்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் இந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்களைப் பார்க்கும் போது இதயம் கனத்தது.
அதே சமையம். இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?!
அடுத்தப் பதிவில் ஊடங்களில் பெண்களைப் பற்றி சில சுவையான தகவல்கள்...
1 comment:
Thanks for the quick introduction. One of these days, I too need to visit the newseum.
//அதே சமையம். இதைவிட பல மடங்கு கொடூர நிகழ்வுகள் ஈழத்தில் நடந்திருந்தும், அவற்றைப் பற்றின எந்தப் பதிவுகளும் புகைப்படங்களும் அந்த அருங்காட்சியகத்தில் இல்லாதது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ஈழத்தமிழர்கள் இலங்கை முகாம்களில் கிடந்து அவதிப்படும் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்றாவது இந்த அருங்காட்சியகத்தில் இருந்திருந்தால், அது தினம் நூற்றுக்கணக்கான இதயங்களை பாதித்திருக்குமே?!//
News is a commodity and what sells hot is published and what is consumed even after becoming (c)old is preserved in museums.
Post a Comment