அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சிரமமாக இருக்கிறது.
அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன். வார இறுதி வந்தால் திருச்சிக்கு தொலைபேச வேண்டும் என்கிற பழக்கத்தை மறக்கமுடியவில்லை.
என் மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்கமாக இருக்கிறது. அவளைத் தூக்கி வளர்க்க, கதைகள் சொல்ல, விளையாட என் அப்பா போல் வேறு ஒருவர் கிடைப்பாரா? அவரை இனி புகைப்படத்தில் மட்டும் தானே அவளுக்குக் காட்ட முடியும்?!
இதுவரை நான் சாதாரணமாகப் பழகிய சித்தப்பாவின்(அப்பாவின் தம்பி) மேல் இப்போது எனக்குப் பாசம் அதிகரித்திருக்கிறது...அவர் அப்பாவின் எஞ்சியிருக்கும் உயிர் அல்லவா?
சிறு வயதில் அப்பா பயணம் சென்றாரென்றால் எனக்கு ஒரே சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் திரும்பி வரும்போது எனக்கு நிறைய உடைகள், விளையாட்டுப் பொருட்களெல்லாம் வாங்கிவருவார். எப்போது அடுத்தப் பயணம் போவார் என்று நான் ஆவலாகக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போது அவரது பயணங்கள் முடிவடைந்துவிட்டன. அவர் மிகவும் நேசித்த திருச்சி வீட்டை விட்டு, எங்களையெல்லாம் விட்டு அருகில் உள்ள மின் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எடுத்துச்செல்லப்பட்டதே அவரது இறுதிப் பயணம்!
இனி வரும் நாட்களில் அவரது நினைவுகளிலும், ஆசீர்வாதத்தோடும் எனது வாழ்க்கைத் தொடரும்...
10 comments:
நினைவுகளுக்கென்று ஒரு தனியிடம் இருக்கிறது.... அவை என்றும் நம்மைவிட்டு அகலாதது.... நம்மை வழிநடத்திச் செல்லும் வல்லமையும் கொண்டவை!!!
migavum kadinama..kaalam ithu..
naanum athay taan jeeranitukondu irukiren
அப்பா, இந்த ஒரு வார்த்தை என்னைக் கண நேரத்தில் கண்ணீரில் ஆழ்த்திவிடும்.
புரிகிறது தாரா.
அனுபவித்துத்தான் வெளி வரவேண்டும்.
ஏனெனில் நினைவுகள் அப்பாவை உங்களுடன் சேர்த்தே வைத்திருக்கும்.
தைரியமாக இருங்கள்.
அவர் இன்னும் எல்லோரின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
"அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன்"
இதற்குப் பெயர்தான் இரத்தப் பாசம் என்பது. ஆறுதல் தங்களுக்கு யார் கூறினாலும், அவர் விட்டுச் சென்ற இடத்தை யாரால் நிரப்ப இயலும்? காலம் ஒன்று தான் தங்களுக்கு மருந்தாக இருக்க இயலும்.
வருத்தங்களுடன்,
செந்தில்
தாரா!
அவருடைய நினைவே இனி ஆனந்தம்!
இரமா.
Hi,tara... don worry.. each and everyone have to cross certain things in our life.. no one plays better than ur dad's play.. but he is not really dead... he resides in ur heart.. may be u dont have more love before he died..now u feel more than that..he s with u always and make your life prosperous.. i don know who u r.. but let me share something here.. three months back i was getting ready for departure in chennai airport towards uk..my younger sister died on that day.. i love her more than anything..my parents hide that news.. but later some time i knew abt it.. i was near immigration..think of my situation..that is life..i was totally out of control don know what to do next..days gone.. she s still with me...so accept de pain..love the pain and love more..ok have a nice day
அப்பா இல்லாத உலகம் எப்படி இருக்குமென்று உங்களுடைய இந்த பகுதியெய் படித்தேன் நெகிழுந்தேன்
என்னுள் நான் எப்படி அழுகீறனோ அதேபோல் உங்கள் உணர்வை என்னால் உணரமுடிகிறது.
சிறந்த பதிவு
உங்களுக்கும் என்னாகும் உள்ள ஒற்றுமை
நானும் சிதம்பரம்
தந்தை இழந்தவன்
வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருப்பவன்
இப்படிக்கு
எபி
அருமையாக எழுதுகிறீர்கள்
நன்றி
தாரா, ஆறுதல்கள். இப்படித்தான் நானும் தவித்தேன். என்னோடு எப்போதும் அவர் எல்லாவிடங்களுக்கும் வருகிறார் என்று கொள்வது தேறுதலையும் துணிவையும் தருகிறது. உங்களுக்கும் அது வாய்க்கட்டும்.
கவலை வேண்டாம் தாரா, காலம் சிறந்த மருந்து. ஆற்றிவிடும்:-(
Post a Comment