இன்று காலை தினமணி செய்திகளில்,
விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பின், அவர் குற்றமற்றவர் என்று முறையாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி கூறியுள்ளதாகப் படித்தேன். நீதிபதி அதொடு நிறுத்தியிருக்கலாம். அவர் தொடர்ந்து "சீதையே தனது தூய்மையை நிரூபிக்க தீக்குளித்தார். சீதையால் மட்டுமே அவ்வாறு நிரூபிக்க இயலும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது" என்று சொல்லியிருக்கிறார். இதை நீதிமன்றம் நம்புகிறது என்றால், ஒரு உண்மையை நீரூபித்தப் பிறகும் அது ஏற்றுக்கொள்ளப் படாமல் பயனற்று போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நீதிமன்றம் நம்புகிறது என்று அர்த்தம். புரியவில்லையா?
சீதை தீக்குளித்து தன் தூய்மையை நீரூபித்தப் பிறகும் நாட்டு மக்களின் சந்தேகத்தைத் தீர்க்க ராமன் அவளை காட்டுக்கு அனுப்பிவிட்டான். சீதை
தீக்குளித்தும், அவளது தூய்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அந்த நீதிபதி யோசிக்காமல் பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தின் நம்பிக்கைக்கே இது முரண்பாடாக அமைகிறது.
ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு இதிகாசம். அதைப் படித்தோம், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தோம், படம் பிடித்தோம். அதோடு விட்டுவிட வேண்டும். அதிலிருந்து உதாரணங்களை அதுவும் இந்த நூற்றாண்டில் எடுத்துக்கொள்வது அர்த்தமற்றதாக இருக்கிறது.