Friday, September 02, 2005

சாரு நிவேதிதாவின் 'கோணல் வாக்கியம்'

சாரு நிவேதிதா வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய புத்தக முயற்சிக்கு பொருளுதவி கேட்டு 'யாசிக்கிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்ந்தார். பிறகு அந்தக் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு 'தரித்திரமும் ஏளனமும்' என்கிறக் கட்டுரையில் பதில் சொல்லியிருக்கிறார். அதில் உள்ள ஒரு கோணல் வாக்கியம் என்னை வருத்தப்படவைத்தது. அந்த வாக்கியம் இதுதான்.

"'யாசிக்கிறேன்' என்ற என் கட்டுரையைப் படித்துவிட்டு பலரும் 'சாரு பிச்சையெடுக்கிறார்' என்று ஏளனம் செய்வதாக அறிந்தேன். இலக்கியத்துக்காக பிச்சை என்ன, திருடக் கூட செய்வேன். பெண்ணாக இருந்திருந்தால் விபச்சாரமும் செய்திருப்பேன் "

ஏதோ அவர் உணர்ச்சிவசப்பட்டு இதை எழுதியிருக்கிறார் என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், அதென்ன 'பெண்ணாக இருந்திருந்தால்' ??? விபச்சாரம் என்பது பெண்களின் சொத்தா? அல்லது அதை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

விபச்சாரம் செய்கிற அளவு துணிந்துவிட்ட சாரு, பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஆதங்கப்பட தேவையில்லை! With due respects, ஆணாக இருந்தாலும் அதற்கு வழி இருக்கிறது. Gigolo, Male sex worker என்றெல்லாம் சாரு கேள்விபட்டதில்லையோ? அந்த மாதிரி தொழில் செய்து இலக்கியத்திற்கு பணம் சம்பாதிக்கலாமே? அதனால் அவருக்கென்ன அவலம்? அப்போதும் தமிழுக்குத் தான் அவலம் என்று சொல்லி சுலபமாகத் தப்பித்துவிடலாம் பாருங்கள்!

மன்னித்துவிடுங்கள்...பெண்கள் விசயம் என்பதால் நானும் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்!

10 comments:

dondu(#11168674346665545885) said...

"With due respects, ஆணாக இருந்தாலும் அதற்கு வழி இருக்கிறது. Gigolo, Male sex worker என்றெல்லாம் சாரு கேள்விபட்டதில்லையோ?"

இந்த மாதிரி ஆட்களுக்கு என்ன With due respects வேண்டியிருக்கிறது? ஆண்புணர்ச்சி பழக்கமுடைய ஆட்களிடமும் தன்னை விற்றுக் கொள்ளலாமே. இவரெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று வந்து விட்டார். தமிழுக்குத்தான் இவர் போன்றவர்களால் இழுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

-L-L-D-a-s-u said...

சரியான கேள்வி ..

பெண்களை விபச்சாரிகள் என்றால் யாருக்கும் கோபம் வருவதில்லை .. நடிகைகளை மட்டும்தான் கூறக்கூடாது .

Anonymous said...

ஏதாவது -தண்ட-வாதம் பண்ணுவதென்று கிளம்புவது?
ஏன்
நடிகைகள் பெண்கள் இலலையா?
இன்னாப்பா கேள்வி இது?

//பெண்களை விபச்சாரிகள் என்றால் யாருக்கும் கோபம் வருவதில்லை .. நடிகைகளை மட்டும்தான் கூறக்கூடாது.//

இன்னாபா நீங்க? இப்பிடி இருக்கு உங்க 'புரிதல்'???

புல்லரிக்கதுபா புல்லரிக்குது
"என்ன தவம் செய்தனை...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தாரா,

பொதுவாக நான் சாரு நிவேதிதாவின் இணையத்தளத்துக்குப் போவதில்லை. போன வாரம், ஒரு பொழுதுபோகாத பொழுதில், ஸ்ரீகாந்த் மீனாட்சியின் வலைப்பதிவில் இருந்து போனேன். போனவள், அங்கே எழுதி இருந்ததையும் படித்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வசனத்தைப் படித்ததும், எனக்கும் இதே எண்ணந்தான் அச்சு அசலாக வந்தது!

அதென்ன பெண்ணாகப் பிறந்திருந்தால், மேல் கிகோலோ'ஸ் பற்றியும் மேல் செக்ஸ் வேர்க்கர்ஸ் பத்தியும் இந்தாள் கேள்விப்படலையான்னு..

இந்த மாதிரி உளறல்களால்தான், இவர் என்னத்தை எழுதினாலும் படிக்கத் தோணுவதில்லை.

-மதி

Anonymous said...

maayavaraththu marumagalae ungal maamanar uRil kuda pombala thevadiyaa thaan iruppathaaga kelvi?

Anonymous said...

தாரா
NY penn station வாசலில் ஒருவன் நின்று கொண்டு தினமும் புஷ, மற்ற எல்லோரையும் திட்டிகொண்டே இருப்பான். ஏதோ கடையை தாண்டி செல்வதைபோல் மக்கள் போய்கொண்டே இருப்பார்கள். அது போலத்தான் இதுவும்.

G.Ragavan said...

தாரா, உங்கள் பதிவு நியாயமானதே.

சாருவின் பேச்சு அதிகப் பிரசங்கித் தனமாகவே இருக்கிறது. இதெல்லாம் கண்டு கொள்ளாமல் போக வேண்டும்.

டோண்டு சார்,
// ஆண்புணர்ச்சி பழக்கமுடைய ஆட்களிடமும் தன்னை விற்றுக் கொள்ளலாமே. //

நீங்கள் எப்பொழுது சாரு நிவேதிதா ஆனீர்கள்?

கூத்தாடி said...

தாரா
உங்களின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது.பின்னூட்டங்ளில் டோண்டுவின் பதில் நல்ல ரசனை உள்ளதாக இல்லை.
வைரமுத்து போன்றோர் கவியரசர்களாக இருக்கும் இந்த நாட்டில் சாருவும்,ஜெய மோகன் ,நகுலன்,சல்மாக்களும் தமிழுக்கு
இழுக்குத்தான்.

பாவக்காய் said...

sari angu enna thaan irukku endru, konal pakkam ponal... angu onnum illai... enna andha site-ui vithutangala ... ?. -Senthil, UK

யாத்ரீகன் said...

நீங்கள் உணர்ச்சிவசப்படுவதில் தவறில்லை.. நியாயமான உணர்வு..

பிறரை அதிகப்படியாக விமர்சிக்கும் எவரும், தன் கோபம் நியாயமானதாய் இருந்தாலும், சொல்லும் சொல்லில் கவனம் தேவை.. (டோண்டு-வுக்கும் அய்யா-வுக்கும் இது பொருந்தும்..)

இந்த பதிவை, அந்த தளத்தில் கொடுத்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்து வையுங்கள் சகோதரி, இதற்கு பதில் கோணல் பக்கங்களில் என்ன வருகின்றது (அல்லது வருகின்றதா ???) என்று பார்ப்போம்..