Friday, January 28, 2005

புதுக் கவிதை முயற்சி - I

சொந்த ஊருக்குக் கூடிய சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டும் என்ற என் கணவரின் அன்றாட புலம்பல்களைத் தொகுத்து ஒரு புதுக் கவிதை முயற்சி. இதே கருத்துள்ள நிறைய கவிதைகளைப் படித்து எல்லாருக்கும் சலித்து போயிருக்கும், இருந்தாலும், முதல் முறை கவிதை எழுதறேங்க. அதனால மன்னிச்சி விட்டுடுங்க!

ஏக்கம

Image Hosted by ImageShack.us

கம்பஞ் சோற்றுக்கும்
தென்றல் காற்றுக்கும்
ஓற்றையடி பாதைக்கும்
சைக்கிள் சவாரிக்கும்
குளிர்ந்த மோருக்கும்
பனைமர நுங்குக்கும்
அம்மா அன்பில் பங்குக்கும்
மனம் ஏங்குதடி...

அவசர சாண்ட்விச்சும்
பனி மழையும் குளிர் காற்றும
்நெரிசல் ஹைவேயில்
டொயோட்டோவிலும்
கப்புச்சீனோவும்
கோக் பாட்டிலுமாக
வாழ்க்கைத் தொடருதடி!

8 comments:

tamil said...

முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள்...

http://shanmuhi.yarl.net/

இளங்கோ-டிசே said...

நுங்கு, மோர் என்று எனக்கும் எனது ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விட்டீர்கள்.பல தடவைகள் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வியை முதற்கவிதை எழுதும் உங்களிடமே முதலாய்க் கேட்கிறேன். கம்பஞ்சோறு எப்படி இருக்கும்? எங்கள் ஊரில் சித்திராப் பவுணர்மிக்கு, மிளகாய், வெங்காயம், அந்த மாதிரி தேங்காய்ப்பால் எல்லாம் கல்ந்து காரமாய் சித்திராப் பவுணர்மிக்கஞ்சி என்று தருவார்கள்? அதுமாதிரியா சுவையா இதுவும்?

தாரா said...

DJ,

கம்பஞ் சோறு காரமாக இருக்காது. கம்பை இடித்து வேகவைத்து உருண்டை பிடித்து த்திருப்பார்கள். அதை மோரில் கரைத்து உப்பு பொட்டு, தொட்டுக்க சின்ன வெங்காயம் அல்லது மோர் மிளகாயுடன் சாப்பிட்டால் சுவர்க்கமாக இருக்கும். ஐயோ, இந்தக் கேள்வியைக் கேட்டு என்னை மூட் அவுட் பன்னிடிங்க.

தாரா.

அன்பு said...

தாரா,

கவிதை என்பதையும் மீறி சொல்லவந்த கருத்து/விஷய்ம் சுவைபட இருக்கவேண்டும். படித்த நாலுபேரை ஈர்க்கவேண்டும், (எனக்கும்) புரியவேண்டும். நான் சொல்லநினைத்ததை சொல்லவேண்டும். அதான் கவிதை என்று எனக்கே எனக்கா ஒரு அளவுகோள் வைத்திருக்கேன்... அதன்படி உங்கள் கவிதை அருமை. (மடக்கி மடக்கி எழுதுவதெல்லாம் கவிதையாகுதுன்னு.... யாராவது சொன்னங்கன்னா கவலைப்படாதீங்க, கன்வுகலைஞ்சு நிஜத்துக்கு வரச்சொல்லுங்க:)

இப்பல்லாம் யாரு கம்பங்கஞ்சி குடிக்கிறாங்க. எங்க ஊர்ல மாதம் மும்மாரி பொழியாதபோது மழை வேண்டி (எங்க மழை பெய்யுது, ஒவ்வொரு வருடமும் நடக்கும்:) அவ்வப்போது ஒரு வைபவம் நடக்கும். வண்டிமலைச்சி அம்மன் கோயிலிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கம் கம்பரிசி கொடுத்து, அதை இடித்து கம்பஞ்சோறு செய்து பானைய கோயிலில் கொண்டுவந்து இறக்குவார்கள். இதற்கிடையில் ஒரு வயதான பாட்டி சில பழைய சாக்கு, துடுப்பு போன்ற சில வஸ்துகளடனும், என்னைபோன்ற சிறுவர் கூட்டத்துடனும் ஊருக்கு வெளியில் சென்று மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். அதை முடித்து ஊருக்குள் திரும்பி, கோயிலில் பூஜை செய்துகொண்டிருக்கும்போதே பெரும்பாலும் மழை பெய்யும். மழையோடு கோயிலுக்கு வந்து சேர்ந்த அனைத்து வீட்டு கம்ப்ஞ்சோறையும் மொத்தமாக பெரிய, பெரிய அண்டாவிலிட்டு கரைத்து, வெங்காயத்துடன் ஊர்மக்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இப்பல்லாம் எப்பவாது ஊருக்குப்போகும்போது அதுபோல் குடித்தால்தான் உண்டு. கடையிலேயே இப்போது கம்பரிசி விறப்து கிடையாது என்று நினைக்கிறேன்.

ஆனால், 93ல் ஈரோட்டில் படிக்கும்போது பேருந்து நிலையத்துக்குள் வண்டியில் கம்பஞ்சோறு, கருவாடு போன்றவை விற்கும் - ஏனோ குடித்ததில்லை:)

பழைய நினைப்புடா பேராண்டி(ச்சி:)...

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

தாரா, உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. சென்ற முறை ஊருக்குப் போயிருந்தபோது கம்பஞ்சோறு வேண்டுமென்று அம்மாவைக் கேட்டுச் சாப்பிட்டு வந்தேன். சூடான கம்பஞ்சோத்துக்கு கடலச் சட்னி, கடஞ்ச கீரை கூட நல்லாத் தான் இருக்கும்.

அன்பு, ஈரோட்டுப் பேருந்து நிலையத்தில அதெல்லாம் வித்தாங்கன்னு எனக்குத் தெரியாத விஷயமெல்லாம் சொல்றீங்க. அது சர், 93ல நான் ஊர விட்டு வந்துட்டேனே!

தாரா, சிறு பொருள் குற்றம்? தென்றல் காற்று இங்க இல்லேங்கறீங்களா?

அன்பு said...

என்னங்க செல்வா... பனிக்காற்று அடிக்குது ஆல்ங்கட்டி அள்ளிப்போட வண்டி விலை கிளியுதுன்னு சொல்லிட்டு.... தென்றல் எங்க வீசுது!?

இங்கு சிங்கப்பூர்ல எங்குபார்த்தாலும் பசுமைதான், சிட்டி இன் தெ கார்டன் என்று சொல்றாங்க அதெல்லாம் சரிதான். ஆனா ஏனோ மரம் எதுவுமே அசையவே மாட்டேண்டுறது - அசைஞ்சா அதற்கு ஏதும் ஃபைன் உண்டோ என்னவோ. அதே வேப்பமர நிழல் தெரியுமோ!? (அது ஏனோ கோவில் தவிர, வேம்புவே இங்கு வைப்பதில்லை). எல்லாம் சீக்கிரம் வளரணும், பச்சையா இருக்கனும் அதான் பேசிக் ரூல்...

மோகன் said...

hi..
your 'kavithai' is good.I read all your postings and the way u write is really nice.you are good in writing whatever you thinks.
expecting lot more from you.
Mohan.S
Dallas

லதா said...

ikkaraikku akkarai pachchai endRudhaan ezhuthath thOndRugiRadhu